Posted in Blog, Temples

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை

திருச்சிராப்பள்ளி என்றும் அழைக்கப்படும் திருச்சி மாநகரத்தில், பண்டைய மலை பாறைகளில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோட்டை வளாகமான திருச்சி மலைக்கோட்டை (Trichy Malaikottai) மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருச்சி மலைக்கோட்டையின் கட்டமைப்பைப் பார்க்கும் போது, உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தும் முதல்…Continue readingதிருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை

Posted in Blog, Temples

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில்

இந்திய நாடு பெரும்பாலும் கோவில்களால் நிறைந்த நாடு என்று சிறப்பித்து கூறப்படுகிறது. இங்கு காணப்படும் கோவில்களில் பல அவற்றின் துடிப்பான வரலாறு மற்றும் கட்டிடக்கலைக்காக உலகளவில் புகழ் பெற்றவையாக திகழ்கிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள நேர்த்தியான கோவில்களின் மிக அற்புதமான உதாரணங்களில் ஒன்றாக…Continue readingஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில்

திருச்சியில் 48 மணிநேரத்தை எப்படி செலவிடுவது?

தமிழத்தின் மத்திய பகுதியில் அமையப்பெற்றுள்ள நகரமான திருச்சிராப்பள்ளி பல்வேறு வரலாற்று சிறப்புகளை பெற்றுள்ளது. காவிரி ஆற்றின் கரையில் அமையப்பெற்றுள்ள இந்த நகரம் பல்வேறு காலகட்டத்தில் பலவிதமாக வளர்ந்து வந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நகரத்தில் சுற்றிப்பார்க்க (travel guide for trichy) எண்ணற்ற சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளன. இந்த மாநகரையும், அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கோவில்களையும் சுற்றிப்பார்க்க 48 மணிநேரம் போதாது. நீங்கள் திருச்சியில் இருந்தால், நீங்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் புத்துயிர் பெற விரும்புவீர்கள், மேலும் திருச்சிக்கு வருவதற்கான உங்கள் தேர்வு கோவில்கள், பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் அதில் உள்ள மற்ற அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிப்பதாக இருக்கலாம். எனவே திருச்சிக்கு வரப்போகும் சுற்றுலா பயணிகள் ஒரு முழுமையான அட்டவணையை தயார் செய்துகொள்ளலாம். உங்கள் 48 மணிநேரத்தின் ஒவ்வொரு வினாடியும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்க உதவும் வகையில் இந்த கட்டுரையை காணலாம்.

முதல் நாள்: ஸ்ரீரங்கம் தொடங்கி மலைக்கோட்டை வரை:

திருச்சிராப்பள்ளி மாநகருக்கு வரும் பயணிகள் முதல் நாள் இங்குள்ள பழம்பெருமை வாய்ந்த பல கோவில்களை தரிசிக்கலாம். காலை ஏழு மணிக்கு தொடங்கி நேராக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லலாம். ஸ்ரீரங்கம் உலகின் மிக பெரிய இந்து கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோவிலை முழுமையாக சுற்றிப்பார்க்க குறைந்தது நான்கு மணி நேரம் வரை ஆகலாம். இங்கு ஸ்வாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி ஆற்றில் நீராடலாம். பின்னர் கோவிலுக்கு சென்று ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்து, கோவிலின் கலையழகையும், மற்ற சன்னதிகளையும் கண்டு தரிசித்தும், ரசித்தும் மகிழலாம். ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள எண்ணற்ற உணவு விடுதிகளில் உங்கள் காலை சிற்றுண்டியை முடித்துக் கொள்ளலாம் .

திருவானைக்காவல் உச்சிகால தரிசனம்:

பின்னர் அங்கிருந்து கிளம்பி நேராக திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி – ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலுக்கு செல்லலாம். திருவானைக்காவல் திருக்கோவில் செங்கோட்சோழன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட மாடக்கோவில் ஆகும். இது பஞ்ச பூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குகிறது. மிக பிரம்மாண்டமான இந்த கோவிலை தரிசிக்க குறைந்தது மூன்று மணி நேரம் வரை ஆகலாம். இங்கு மதியம் நடைபெறும் உச்சிகால பூஜை சிறப்பு பெற்றது. உச்சிக்காலத்தில் அகிலாண்டேஸ்வரி அம்மை, சுவாமி ஜம்புகேஸ்வரரை பூஜிப்பதாக ஐதீகம். எனவே இங்கு உச்சிகால பூஜை தரிசிப்பது மிகவும் விஷேஷம் ஆகும். இந்த கோவிலின் தரிசனத்தை முடித்தவுடன் நீங்கள் மதிய உணவு அருந்திவிட்டு, நேராக கிளம்பி சமயபுரம் சென்றடையலாம்.

சமயபுரம் சாயரட்சை தரிசனம்:

சமயபுரம் மாரியம்மன் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது ஆகும். இந்த அம்மன் முன்னர் ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் இருந்ததாகவும், பின் வந்த காலத்தில் அம்மனின் உக்கிரம் தாங்க முடியாமல் அங்கிருந்து இடம்பெயர்ந்து இங்கு வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு தங்கையாக விளங்கும் இந்த அம்மனுக்கு வருடம் தோறும் ஸ்ரீரங்கநாதர் சீர்வரிசை கொடுத்து சிறப்பிக்கிறார். மதியம் திருவானைக்காவல் தரிசனம் முடித்து கிளம்பி வந்தால் சமயபுரம் கோவிலை பிற்பகல் மூன்று மணிக்குள் வந்தடைந்து விடலாம். மாலை நான்கு மணிக்கு நடை திறந்தவுடன் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்து விடலாம். இது சிறிய கோவில் என்பதால் சுமார் ஒரு மணி நேரத்திற்குள்ளாக தரிசனம் செய்து விடலாம். பின்னர் இங்கிருந்து கிளம்பி திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோவிலுக்கு செல்லலாம்.

மலைக்கோட்டை இராக்கால தரிசனம்:

மலைக்கோட்டை என்பது திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ளது. இந்த கோட்டையில் தான் புகழ்பெற்ற உச்சி பிள்ளையார் கோவில் அமையப்பெற்றுள்ளது. இந்த மலையின் மத்திய பகுதியை குடைந்து தாயுமானவ சுவாமி திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவில் தொடங்கி, மத்தியில் உள்ள தாயுமானவ சுவாமி கோவில், உச்சியில் உள்ள பிள்ளையார் கோவில் ஆகியவற்றை தரிசித்து முடிக்க சுமார் மூன்று மணி நேரம் ஆகலாம். மலைக்கோவில் என்பதால் படியேறிச் செல்ல வேண்டியிருக்கும். மலையின் உச்சியில் உள்ள பிள்ளையாரை தரிசித்த பின்னர் அங்கிருந்து பார்த்தால் திருச்சி மாநகரின் மொத்த அழகையும் கண்டு ரசிக்க முடியும். அதிலும் இரவு நேரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் மாநகர் கண்களுக்கு விருந்தாக அமையும். பின்னர் அங்கிருந்து கிளம்பி மலை அடிவாரம் அவனது சேர்ந்தால், ஷாப்பிங் செய்ய ஏற்ற வகையில் உள்ள கடை வீதிகளை காணலாம். அங்கு நீங்கள் ஏதும் ஷாப்பிங் செய்ய விரும்பினால் செய்து கொள்ளலாம். பின்னர் அங்கிருக்கும் உணவகங்களில் உங்கள் இரவு சிற்றுண்டியை முடித்து கொண்டு அன்றைய பயணத்தை (travel guide trichy) நிறைவு செய்து கொள்ளலாம்.

இரண்டாம் நாள்: முக்கொம்பு தொடங்கி கல்லணை வரை.

காலை விடிந்தவுடன் தினசரி கடமைகளை முடித்து விட்டு கிளம்பி நேராக முக்கொம்பு அணைக்கு செல்லலாம் (Tiruchirappalli Travel Guide). இது அப்பர் அணைக்கட்டு என்று அழைக்கப்படுகிறது. இங்கு சென்று நாம் காவிரி ஆற்றில் குளியல் போடலாம். அணைக்கட்டையும் அதில் இருந்து மூன்று பிரிவாக பிரியும் காவிரி ஆற்றின் அழகையும் கண்டு ரசிக்கலாம். அணைக்கட்டை சுற்றி பொழுது போக்கும் விதமாக பூங்கா உண்டு. இங்கு சிறு சிறு கடைகளில் நாம் கொரிக்க தேவையான பண்டங்கள், பழங்கள் மற்றும் காபி, டீ ஆகியவை விற்பனையாகும். முக்கொம்பில் சுற்றி பார்த்த பின்னர் அங்கிருந்து கிளம்பி நேராக திருச்சி மாநகருக்குள் இருக்கும் கொள்ளிடம் ஆற்று பாலத்துக்கு செல்லலாம். பாலத்தில் இருந்தபடியே காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசிக்கலாம்.

பின்னர் அப்படியே கரிகாலன் கட்டிய கல்லணைக்கு சென்று பார்வையிடலாம். கல்லணையை பார்வையிட்ட பின்னர் அருகில் இருக்கும் திருவெறும்பூர் மலை கோவிலுக்கு சென்று வரலாம். இது தவிர அருகிலுள்ள ரயில்வே மியூசியம், அண்ணா அறிவியல் கோளரங்கம், அரசு அருங்காட்சியகம், போர் நினைவு சின்னம் ஆகியவற்றையும் சுற்றி பார்க்கலாம். மேலும் நேரம் இருந்தால் அருகில் இருக்கும் உறையூர் வெக்காளி அம்மன் கோவில், உத்தமர்கோவில், வயலூர் முருகன் கோவில் மற்றும் விராலிமலை முருகன் கோவில் ஆகியவற்றையும் தரிசிக்கலாம்.

சுற்றுலாவை முடித்த பின்னர் மாலை வேளையில் நேரம் இருந்தால் திருச்சிராப்பள்ளி மாநகரில் உள்ள தில்லைநகர் பகுதிக்கு சென்றால் அங்குள்ள கடை வீதிகளில் ஷாப்பிங் மேற்கொள்ளலாம். திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள எண்ணற்ற கோவில்கள் மற்றும் சுற்றுலா ஸ்தலங்களை தரிசிக்க இரண்டு நாட்கள் என்பது மிகவும் குறைவான நேரம் தான். அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க வேண்டுமானால் மேலும் அதிக நேரம் தேவைப்படும். இருந்தாலும் இரண்டு நாட்கள் பயணமாக திருச்சி வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் மணி நேரத்தில் என்னென்ன இடங்களை பார்வையிடலாம் என்பது பற்றி இந்த கட்டுரை உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

திருச்சி அருகிலுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள்:

  1. ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில்.
  2. திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் திருக்கோவில்.
  3. சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில்.
  4. திருப்பட்டூர் பிரம்மன் திருக்கோவில்.
  5. வயலூர் முருகன் கோவில்.
  6. உத்தமர்கோவில்.
  7. உறையூர் வெக்காளி அம்மன் கோவில்.
  8. மலைக்கோட்டை கோவில்.
  9. ரயில்வே மியூசியம்.
  10. அரசு அருங்காட்சியகம்.
  11. அண்ணா அறிவியல் மையம்.
  12. புளியஞ்சோலை நீர் வீழ்ச்சி.
  13. ஆகாச கங்கை நீர்வீழ்ச்சி.
  14. கொல்லிமலை.
  15. கல்லணை அணைக்கட்டு.
  16. முக்கொம்பு அணைக்கட்டு.
  17. திருவெறும்பூர் திருக்கோவில்.
  18. விராலிமலை திருக்கோவில்.

இது தவிர இன்னும் எண்ணற்ற கோவில்களும், சுற்றுலா மையங்களும் திருச்சி அருகில் அமையப்பெற்றுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் திருச்சிக்கு செல்வதற்கு முன்னர் ஒரு சிறு அட்டவணையை (Tiruchirappalli Travel Guide) தயார் செய்து வைத்துக்கொண்டு செல்வது நல்லது.

Leave a Reply