திருச்சி அருகில் உள்ள புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி
சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நீர்வீழ்ச்சிகள்:
இயற்கை நீர்வீழ்ச்சிகள் என்பது ஒரு சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தை குறிப்பதாக விளங்குகிறது. நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தால் அது அந்த பகுதி முழுவதையும் வளமுடன் வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நீர்வீழ்ச்சியின் மேல் செல்லும் நீரோடை தொடர்ந்து நிறைவான நீர் ஓட்டத்தில் இருந்தால், அது அருகிலுள்ள பகுதியைச் சுற்றிலும் பசுமையாக வைத்திருக்க உதவும்.
நீர்வீழ்ச்சிகள் என்பது உலக அளவில் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. நீர்வீழ்ச்சியின் குளிர்ச்சியிலிருந்து அதன் மூலிகை கலந்த நறுமணம் வரை அது மனிதர்களுக்கு சிறந்த புத்துணர்ச்சியை அளிக்கிறது. இயற்கை உலகின் உண்மையான அழகை உணரவும், மணிக்கணக்கில் செலவிடக்கூடிய சிறந்த இடமாகவும் நீர்வீழ்ச்சிகள் விளங்குகின்றன. இயற்கையை ஆராய்வதில் மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், அவற்றுக்கு பின்னால் உள்ள அறிவியலை ஆச்சரியப்படுத்தும் பல கேள்விகளுடன் நாம் அணுகுகிறோம். நீர்வீழ்ச்சியிலும் இதே நிலைதான். அதைப் பார்க்கும் போது, அது செயல்படும் விதம், அதன் ஓட்டம் மற்றும் இயக்கம் ஆகியவற்றைக் கண்டு நாம் அடிக்கடி ஆச்சரியப்படுகிறோம்.
நீர்வீழ்ச்சி என்றால் என்ன, அது எப்படி உருவாகிறது?
ஆறு அதன் நீரோடைப் படுக்கையில் பாயும் போது அதன் நீர் நகரக்கூடிய மண், மணல், கற்கள், பாறைகள் மற்றும் பிற பொருள்களை அரிக்கிறது, அதன் ஓட்டத்தில் அவற்றை நகர்த்துகிறது. அதன் பாதையில் தொடர்ந்து நகரும் போது அது நகர்த்த முடியாத பெரிய பாறைகளை எதிர்கொள்கிறது எனவே அது அதன் அசல் எல்லைகளை அழித்து பாறைகள் மீது பாயத் தொடங்குகிறது.
தெர்மோடைனமிக்ஸின் இரண்டாவது விதிக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு, இது ஒழுங்கற்ற நிலைக்கு விஷயங்கள் அதிக சாய்ந்திருப்பதாகக் கூறுகிறது. இங்குள்ள நதி நீர் எவ்வாறு செயல்படுகிறது. அது அதன் அசல் பாதையை அழித்து விளிம்பு அல்லது பாறையை அடையும் வரை அதன் எல்லைகளுக்கு வெளியே பாய்கிறது. பின்னர் அது பாறையிலிருந்து கீழே விழுந்து புதிதாக உருவாக்கும் நதிப் படுகையில் சேர்க்கிறது. இப்படித்தான் ஒரு புதிய பள்ளம் உருவாக்கப்பட்டு நீர்வீழ்ச்சி உருவெடுக்கிறது.
பொதுவாகவே நகரும் நீர், தேங்கியிருக்கும் தண்ணீரை விட எளிதில் ஆக்ஸிஜனேற்றப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது, மேலும் நீர்வீழ்ச்சிகள் நீர்நிலைகளை சுத்தப்படுத்தவும் சுத்திகரிக்கவும் சிறந்த வழியாக விளங்குகிறது. அவை கழிவுகளை ஊட்டச்சத்துக்களாக மாற்றுவது, தண்ணீரில் ஆக்ஸிஜனை அதிகரிப்பது போன்ற வேலைகளை இயற்கையாகவே செய்கிறது.
நீர்வீழ்ச்சி அந்த பகுதியை சுற்றியுள்ள வனவிலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் சிறந்த நீரை வழங்க உதவுகிறது. நீர்வீழ்ச்சிகள் அருகிலுள்ள விவசாயிகளுக்கு ஒரு சிறந்த விளைநிலங்களை வழங்குகிறது, மீன் இனப்பெருக்கம் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது, மேலும் சுற்றுச்சூழல் சூழ்நிலையை மேம்படுத்தி அருகிலுள்ள மக்களுக்கு பல வழிகளில் உதவகிறது. பல பகுதிகளின் பொருளாதாரங்களில் சுற்றுலா என்பது ஒரு முக்கிய காரணியாகும். பெரும்பாலான மக்கள் நீர்வீழ்ச்சியை சிறந்த சுற்றுலா தலமாக கருதுகிறார்கள். அதனால்தான் நீர்வீழ்ச்சிகள் ஒரு பகுதியின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகள் பார்க்க விரும்பும் இடமாக திகழ்கிறது, எனவே ஒரு நாடு அல்லது பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான காரணியாக நீர்வீழ்ச்சி இருக்கிறது.
இங்கு நாம் திருச்சிராப்பள்ளி மாநகருக்கு அருகில் இருக்கும் பிரபலமான சுற்றுலா தலமான புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி பற்றி காணலாம்.
புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி (Puliyancholai waterfalls in trichy):
திருச்சிராப்பள்ளி மாநகருக்கு அருகில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சி இயற்கையான சூழ்நிலையில் புளிய மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் அமையப்பெற்றுள்ளது. இந்த பகுதி முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் சூழல் இருப்பதால், வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவுகிறது. இது கொல்லிமலையின் அடிவாரத்தில் அமையப்பெற்றுள்ளதால் அருவியின் நீரானது மலையின் மீதுள்ள பல அற்புத மூலிகைகளின் நறுமணத்தையும், மருத்துவ குணத்தையும் தாங்கி வருகிறது. எனவே இந்த நீர்வீழ்ச்சியில் நீராடுவதால் மூலம் மனிதர்களின் உடல்நலம் புத்துணர்வு பெறுகிறது.
இந்த புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி (Puliyancholai waterfalls near trichy) சுற்றுலாப்பயணிகளின் இயற்கை குளியல் பகுதியாக விளங்குகிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு மேலே மலையின் மீது ஆகாய கங்கை என்று அழைக்கப்படும் ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது. புளியஞ்சோலை நீர்வீழ்ச்சியில் இருந்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி வரை செல்ல ஐந்து மணி நேரம் கடினமான மலைப்பாதை வழியாக பயணிக்க வேண்டியிருக்கும். இந்த மலைப்பகுதியில் ஒரு மில்லியன் ஆண்டுகள் பழமையான வளைந்த பாறைகள், டால்மன்ஸ், பித்துக்குளி குகை, பல்வேறு வடிவிலான பெரிய கற்கள், வனப்பகுதிகள் இருக்கிறது. மலை மேல் சமவெளி பகுதியில் தேன் கொய்யா, ஆரஞ்சு, கடுகு, வெந்தயம், பூண்டு, நெல், பிரமை, தினை, பலா பழங்கள் போன்றவை விளைகிறது.
திருச்சிராப்பள்ளி மாநகரப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வார இறுதி நாட்களையும், தங்கள் குழந்தைகளின் விடுமுறை நாட்களையும் மகிழ்ச்சியாக கழிக்கும் பொருட்டு சுற்றுலா செல்ல தேர்த்தெடுக்கும் முக்கிய இடங்களுள் ஒன்றாக இந்த புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி (Puliyancholai waterfalls near trichy) விளங்குகிறது. திருச்சி மாநகரில் இருந்து இரண்டு மணிநேரத்தில் இந்த நீர்வீழ்ச்சியை அடைந்து விடலாம் என்பதால், மக்கள் அதிக ஆர்வமுடன் இங்கு செல்ல திட்டமிடுகிறார்கள். பொதுவாகவே அனைவருக்கும் தண்ணீரில் குளிப்பதென்றால் மிக சந்தோசமாக இருக்கும். அதிலும் அருவி குளியல் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விஷயமாகவே இருக்கிறது. எனவே புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி திருச்சி வாழ் மக்களிடையே மிகவும் பிரபலமாக விளங்குகிறது.
கொல்லிமலையின் அடிவாரத்தில் அமையப்பெற்றுள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் வருகை தருகிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்ய இங்கு சிறு சிறு கடைகள் உள்ளன. மேலும் தங்குவதற்கு ஏற்ற வகையில் சிறு குடில்களும் உள்ளன. திருச்சிராப்பள்ளிக்கு சுற்றுலா செல்ல விரும்பும் நபர்கள் தங்கள் பயணத்திட்டத்தில் இந்த புளியஞ்சோலை நீர்வீழ்ச்சியையும் சேர்த்துக் கொள்ளலாம். இங்கு சுற்றுலா வரும் பயணிகள் கொல்லிமலை மீதுள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு, மலை மீது உள்ள கோவிலுக்கும் ட்ரெக்கிங் மூலம் சென்றடையலாம். அரசு சார்பாக கொல்லிமலைக்கு முக்கிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால், பேருந்து பயணம் மூலமும் கொல்லிமலையை சென்றடையலாம். புளியஞ்சோலை நீர்வீழ்ச்சியில் நீராடி, கொல்லிமலை மீதுள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி, மலை மீது உள்ள கோவில் மற்றும் பிற பழமையான இடங்களை கண்டு ரசிக்கும் படி ஒரு முழு நாள் பயணத்திட்டத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.
புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி அமைவிடம் (Puliyancholai waterfalls near trichy):
திருச்சிராப்பள்ளியில் இருந்து சாலை மார்கமாக சுமார் 72 கிமீ தொலைவில் அமைந்துள்ளது புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி.